விஷால் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்..!

215

Vishal-

தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய தினமே விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் விஷால். அதாவது, “தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில் திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளோம். அதனால் எவ்வளவு பணம் வரும் என எனக்கு தெரியாது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்” என்பதுதான் விஷால் சொன்னது..

ஆனால் விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசினார்.

தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஒன்று செய்யலாம் .அவர் விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம்.

நடிகர் சங்கத்தை கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம். தயாரிப்பாளர் சங்கத்தை கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம். ஆனால் எங்களை இதில் சம்பந்தப்படுத்துவது ஏன்..?” என கேட்டுள்ளார்..

விஷால் சொன்ன விஷயத்தை தவறாக புரிந்துகொண்டே இதுபோன்ற அறிவிப்பதை தியேட்டர் உரிமையாளர் சங்கம் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.. இருப்பினும் இதுகுறித்து விஷால் தரப்பில் இருந்து விரிவான விளக்கம் வரும் என எதிர்பார்க்கலாம்.

Comments are closed.