சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘24’ படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. தேசிய விருது வென்றிருக்கும் அனைவருக்கும் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது
“ஒட்டுமொத்த ’24’ குழுவினரும் தேசிய விருது அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஒளிப்பதிவாளர் திரு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களான அமித் மறும் சுப்ரோ ஆகியோரின் பணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய படக்குழுவினரின் சார்பாக நன்றி.
ஏ.ஆர்.ரஹ்மான் சார் சொன்னது போல ’24’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். அதை முடிப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. அவர்களுடைய முந்தைய படங்களுக்கும் சேர்த்து கிடைத்த ஒரு மரியாதையாகத் தான் பார்க்கிறோம்.
மனதுக்கு பிடித்த ஒரு படத்துக்கு தேசியளவில் அங்கீகாரம் கிடைக்கும் போது ரொம்ப ஊக்குவிப்பாக இருக்கிறது. இது போன்ற மனது நெருக்கமான படங்களுக்கு செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி” என கூறியுள்ளார் சூர்யா..

Comments are closed.