இலவச வீடு வழங்கும் திட்டம் ; இலங்கை செல்கிறார் ரஜினி..!

240

rajini - srilanka

இலங்கையில் போருக்குப் பின்னரும் முகாம்களில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்காக லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை 150 வீடுகளை நிர்மாணித்து இலவசமாக வழங்க உள்ளது. ஞானம் அறக்கட்டளை. லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தான் இது.

வவுனியா சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்துள்ளது. இந்த புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் விழா யாழ்ப்பாணதில் ஏப்-9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு தன் கைகளால் வழங்கி வைக்க இருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு உதவிகரமாக இருக்கும் நிகழ்வு என்பதாலும் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் ‘2.O’ படத்தில் தான் நடித்து வருவதாலும் இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினி ஒப்புதல் கொடுத்துள்ளார் என்றே தெரிகிறது. ஈழத் தமிழர்களுக்கான இந்த நிகழ்ச்சியில் தான் சமூகமளிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார், இத்தைய நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Comments are closed.