நடிகைகளுக்கு ஆர்.கே.செல்வமணி திடீர் உத்தரவு..!

194

r.k.selvamani

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி தலைவராக வெற்றிவாகை சூடினார்.. தற்போது ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஆர்.கே.செல்வமணி, நடிகைகளுக்கு, குறிப்பாக மும்பையில் இருந்து நடிக்கவரும் நடிகைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்..

மும்பையில் இருந்து தமிழுக்கு நடிக்க வரும் நடிகைகளில் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான நடிகைகள் தங்களுக்கு உதவிக்காக கூடவே ஐந்தாறு பேர் கொண்ட கூட்டத்துடன் படப்பிடிப்புக்கு வருவது வாடிக்கை.. இதனால் தயாரிப்பு செலவு கணிசமாக உயர்வதுடன் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.செல்வமணி, “மும்பையில் இருந்து தமிழ்சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் தங்களுக்கு மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் போன்ற உதவிகளுக்கு மும்பையில் இருந்து ஆட்களை அழைத்து வர கூடாது.. இங்கே பெப்ஸியில் உள்ள தொழிலார்களைத்தான் இனி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என கூறியுள்ளார்.

Comments are closed.