’36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ஜோதிகா.. ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.. இந்தப்படத்தில் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் ஜோதிகா.
இதற்குமுன் இவர் முதன்முதலாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியது சிங்கம்புலி டைரக்சனில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘மாயாவி’ படத்துக்காகத்தான். அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து சொந்தக்குரலில் அவர் பேசுவதால் இந்தப்படம் ஜோதிகாவுக்கு இன்னொரு ஸ்பெஷலான படம் என்றே சொல்லலாம்.

Comments are closed.