தெலுங்கில் நடிக்க நிகிலா விமல் ஒப்புக்கொண்டது இந்த காரணத்தால் தான்..!

244

Meda-Meeda-Abbayi-Movie

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் தெலுங்கு திரையுலகில் கால் வைப்பது தானே வழக்கம்.. கிடாரி நாயகி நிகிலா விமல் மட்டும் இதற்கு விதிவிலக்காகி விடுவாரா என்ன..? தெலுங்கில் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக ‘மேடா மீதா அப்பாயி’ என்கிற படத்தில் நடிக்க ஒப்ந்தமாகி இருக்கிறார் நிகிலா.

மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம்.. இதுநாள் வரை தனக்கு தெலுங்கு தெரியாது, புரியாது என்கிற ஒரே காரணத்திற்காக, தன்னை தேடிவந்த சில தெலுங்கு வாய்ப்புகளை நிராகரித்து வந்தாராம் நிகிலா விமல்..

தற்போது இந்தப்படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பிரஜித் காரணவரே இந்தப்படத்தை இயக்குவதும் இன்னும் சில மலையாள டெக்னீசியன்கள் இந்தப்படத்தில் பணியாற்றுவதும் தானாம். நிகிலா நடிக இருப்பது மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்த கேரக்டரில் தான்.

Comments are closed.