டேனியல் பாலாஜி சிங்கள பாஷை பேசவேண்டிய அவசியம் என்ன..?

225

daniel-balaji

டேனியல் பாலாஜி.. அழகு தமிழிலும் சரி, அசத்தலான ஆங்கிலத்திலும் சரி தெளிவாக வசனம் பேசி ஹீரோக்களை ஜெர்க் அடிக்க வைக்கும் வில்லன் நடிகர்.. இப்போது ஒரு படத்தில் முதன்முறையாக சிங்கள பாஷை பேசி நடித்திருக்கிறார்.. வெறும் பாஷை மட்டுமல்ல.. சிங்கள ராணுவ தளபதியாகவுமே நடித்திருக்கிறாராம்.

படத்தின் பெயர் ‘யாழ்’.. கதையும் யாழ்ப்பானத்தில் நடக்கும் கதைதான். இந்த கேரக்டரில் நடிப்பதற்காகவும் சிங்கள பாஷை பேசுவதற்காகவும் நிறைய பயிற்சி எடுத்து நடித்துள்ளாராம் டேனியல் பாலாஜி. கதை இலங்கையில் நடப்பது போல என்றாலும் தமிழ்நாட்டிலேயே யாழ்ப்பாணம் செட் போட்டு காட்சிகளை படமாக்கியுள்ளார்களாம்.

Comments are closed.