சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சி-3’ படம் வரும் ஜன-26ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் பம்பரமாக சுற்றிவருகிறார் சூர்யா.. இரண்டு தினங்களுக்கு முன் கோவையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சூர்யா நேற்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்..
இந்த நிகழ்வில் ‘சி-3’ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்ட சூர்யாவிடம் ஜல்லிக்கட்டு தடை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, “எங்கேயாவது மாணவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என தேர்வையே தடை பண்ணிவிடுவார்களா என்ன… அப்படித்தான் இருக்கிறது ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும்” என நெத்தியடியாக கூறினார்.
தொடர்ந்து திருச்சூரில் நடைபெற்ற ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார் சூர்யா. கேரளாவில் சூர்யாவுக்கென பலமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவரது படம் ரிலீசாகும்போதேல்லாம் சுமார் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் தான் ரிலீஸாகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments are closed.