விஷால் வீட்டில் கல்யாணக்களை கட்ட தொடங்கி விட்டது..!

228

vishal-family-haapy

நடிகர்சங்க கட்டடத்தை கட்டி முடித்தபின் தான் தனது திருமணம் என்பதை தெளிவாகவே சொல்லிவிட்டார் விஷால்.. அதனால் அவரது கல்யாணம் குறித்த யூகங்களும் வதந்திகளும் தற்போது வெகுவாக குறைந்துள்ளன. ஆனாலும் விஷாலின் வீட்டில் கல்யாணக்களை கட்ட துவங்கியுள்ளது. ஆனால் அது அவரது தங்கை ஐஸ்வர்யாவின் திருமண ஏற்பாடுகளால் தானாம்..

விஷாலின் தங்கை ஐஸ்வர்யா சிங்கப்ப்போரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக பிசினஸை கவனித்து வருகிறார்.. இந்நிலையில் நகைகடை அதிபரின் மகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், 2017 துவக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், மார்ச் வாக்கில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் அந்த குடும்பத்தின் மூத்த மருமகளான ஸ்ரேயா ரெட்டி கூறியுள்ளாராம்.

Comments are closed.