விஷ்ணு-அமலாபாலை ஜோடியாக்கிய ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர்..!

102

vishnu-amalaa-paul

முண்டாசுப்பட்டி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக இயக்கவுள்ளார் இயக்குனர் ராம்குமார்.. அவரது முதல் பட நாயகன் விஷ்ணு தான் இதிலும் நாயகனாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்க கதாநாயகி தேடிய ராம்குமார், அதற்கு பொருத்தமான தேர்வாக அமலாபாலை ஒப்பந்தம் செய்துள்ளார்..

மேலும் இந்தப்படத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் உண்டு.. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு புதுமுகமாக தேடிவருகிறாராம் ராம்குமார்.. காரணம் இந்தப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் இதுவரை தமிழ்சினிமா பார்க்காத ஒன்று என்கிறாராம் ராம்குமார்.

Comments are closed.