சேனல்களில் ட்ரெண்டுக்கு வந்த சிவாஜியும் கத்துக்குட்டியும்..!

219

sivaji-kathukutty

நடந்த சம்பவங்களை படமாக இயக்குவது ஒருவிதம்.. ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்காலத்தில் இப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை குறிப்பால் உணர்த்துவது போல படங்களை எடுப்பது இன்னொரு விதம். இந்த இரண்டாம் வகை படங்கள் தான் தீர்க்கதரிசன வகையை சேர்ந்தவை.

கருப்பு பணம் பற்றிய முழுமையான படமாக ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ 2007ல் வெளிவந்தது.. அதில் கிளைமாக்ஸில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன என்கிற வாசகம் இடம்பெற்றது.. இப்போது அது நடைமுறைக்கு வந்துள்ளதால் ‘சிவாஜி’ படம் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

அதேபோல விவசாயிகள் முழு மூச்சாக எதிர்த்து வந்த மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.. இந்த திட்டத்தின் அபாயம் குறித்து தான் இயக்கிய ‘கத்துக்குட்டி’ படம் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருந்தார் அந்தப்படத்தின் இயக்குனர் சரவணன்.

அதனால் இப்போது ‘கத்துக்குட்டி’ படமும் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் ரைட்ஸ் விலைகொடுத்து வாங்கிய சேனல்கள் முதல், உள்ளூர் சேனல்கள் முதற்கொண்டு டைமிங்காக ஒளிபரப்பி வருகின்றன. அந்தவகையில் இந்தப்படங்களின் படைப்பாளிகள் தங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

Comments are closed.