சூர்யாவின் வாழ்த்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்…!

105

surya-gautham-menon

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் பற்றி பலரும் பாராட்டிவரும் வேளையில், கௌதம் மேனன் ட்விட்டர் பக்கத்திலேயே கௌதம்-சிம்பு இருவருக்கும் தனது வாழ்த்தை பதிவு செய்திருந்தார் சூர்யா..

சூர்யாவை பொறுத்தவரை யாருடனும் விரோதம் பாராட்டுபவர் அல்ல.. சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படிருந்தாலும் அதை நீண்ட காலத்துக்கு நீட்டிப்பவரும் அல்ல.. சூர்யாவின் குணம் அறிந்தவர்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும்.. அதனால் தான் உள்ளார்ந்த அன்புடன் கௌதம் மேனனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் சூர்யா..

ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ படம் தொடர்பாக தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை சூர்யா ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பதையே அவரது செயல் உணர்த்துகிறது.. இதனைத்தொடர்ந்து கௌதம் மேனனும் சூர்யாவும் மீண்டும் இணைந்துவிட மாட்டார்களா, ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஆரம்பிக்க மாட்டார்களா என்பதே ரசிகர்களின் பலரது விருப்பமாக மாறியுள்ளதை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.

Comments are closed.