
சிபிராஜ் தற்போது நடித்துவரும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் அடுத்ததாக ‘சைத்தான்’ இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சிபிராஜ். அவருக்கு ஜோடியாக முதன்முறையாக கூட்டணி சேர்கிறார் ரம்யா நம்பீசன்.
இவர்களுடன் ஆனந்தராஜ், சதீஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப்படத்தை சிபிராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. வரும் நவம்பர்-2ஆம் தேதி இதன் படப்பிடிப்பை துவங்கி ஏக் தம்மில் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற ‘க்ஷணம்’ என்கிற படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால் இயக்குனர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இது ரீமேக் படமல்ல, என்னுடைய சொந்த கதை தான் என ஆரம்பத்திலேயே சர்ச்சை ஏற்படாதவாறு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
Comments are closed.