விஜய்சேதுபதி-ரித்திகா சிங்கிற்கு மீண்டும் ஒரு கட்டளை..!

227

rithika-sing-vijay-sethupathi

கடந்த மாதம் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தை பார்த்த ரசிகர்கள் அதில் நடித்திருந்த ரித்திகா சிங்-விஜய்சேதுபதி இருவருக்குமான காதல் போர்ஷன் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் இருந்திருக்க கூடாதா என்று நினைக்கவே செய்திருப்பார்கள்.. காரணம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அந்தப்படத்தில் அற்புதமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது..

ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்துகொண்டாரோ என்னவோ, இயக்குனர் ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம், அடுத்ததாக தான் விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு மீண்டும் ரித்திகா சிங்கையே ஜோடி சேர்த்துவிட்டார்.

அப்படியானால் ஏற்கனவே பேசப்பட்ட மஞ்சிமா மோகன், கீர்த்தி சுரேஷ்.. இவர்கள் எல்லாம்..? ம்ம்ஹூம்… ரித்திகா சிங் தான் பைனல் ரவுண்டுக்கு வந்திருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் காதல், ஆக்சன் கலந்த படமாக இது உருவாக இருக்கிறதாம். டிச-15ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.

Comments are closed.