
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு தனகளது கரங்களால் தீபாவளி பரிசை வழங்கினார்கள்.. இந்த விழாவில் பேசிய விஷால், ஸ்டார் கிரிக்கெட்டில் ஊஅழல் நடந்துள்ளதாக கூறுவோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.
“நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம்” என கூறியுள்ளார் விஷால்.
Comments are closed.