
நீண்ட காலம் கழித்து மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஹாரர் படம் தான் ‘எஸ்ரா’.. இந்தப்படம் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.. காரணம் இந்தபடத்தின் ஹீரோ பிருத்விராஜும், ஹீரோயின் பிரியா ஆனந்தும் மற்றும் எந்த மொழிக்கும் மேட்ச் ஆகும் ஹாரர் திரைக்கதையும் தான்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு விஷயத்தை சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு போய்விடுவீர்கள். ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தபோது திடீரென அனைத்து விளக்குகளும் தானாகவே எரிந்தனவாம். ஆனால் கனெக்சன்கள் அனைத்தும் சரியாகவே இருந்தன. சரி.. ஜெனரேட்டர் கோளாறாக இருக்கலாம் என நினைத்து வேறு ஜெனரேட்டரை மாற்றினால் அதிமுக்கியமான கேமரா சாதனங்கள் உடனே பழுதடைந்தனவாம்.
படத்தின் கதாநாயகியாக நடிக்கும் பிரியா ஆனந்த் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தாராம். இதனால் கலவரமான யூனிட்டார் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து சில சம்பிரதாய சடங்குகளையும் பரிகாரங்களையும் செய்தபின்னர் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார்களாம். இப்பவே படம் பார்க்கும் ஆவல் எழுகிறது தானே..?
Comments are closed.