நடிகர் ஆனார் மோகன்லாலின் மகன்..!

236

mohanlal_pranav
மலையாள முன்னணி ஸ்டார்களான மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோர் தங்களது வாரிசுகளை ஹீரோக்களாக களம் இறக்கிவிட்டு அவர்களுக்கான எதிர்கால பாதையை காட்டிவிட்டனர். ஆனால் மோகன்லால் மட்டும் தனது மகன் ப்ரணவ் எதிர்காலம் பற்றி எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்து வந்தார்.. அதற்கேற்ற மாதிரி அவரது மகனும் நடிப்பில் ஆர்வம் காட்டாமல், டைரக்சன் கற்றுக்கொள்வதற்காக இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்..

அதனால் அவர் நடிகராகாமல் இயக்குநராகத்தான் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.. ஆனால் இந்த யூகங்களை எல்லாம் தவிடுபொடியாகி விட்டார் மோகன்லால்.. தனக்கு ‘த்ரிஷயம்’ என்கிற மாபெரும் ஹிட் மூலம் வெற்றி மகுடம் சூட்டிய ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக மகனை அறிமுகப்படுத்துகிறார் மோகன்லால்..

மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமா நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது.. ‘த்ரிஷ்யம்’ போல இதுவும் ஒரு த்ரில்லர் படமாக உருவாக்க இருக்கிறதாம். இந்த தகவல்கள் அனைத்தையும் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இதை உறுதி செய்துள்ளார் மோகன்லால்.

Comments are closed.