
மினிமம் கியாரண்டி இயக்குனர் மற்றும் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்டவர் இயக்குனர் ஆர்.கண்ணன்.. ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் ஆரம்பித்த இவரது திரையுலக பயணம், சின்னச்சின்ன தடங்கல்களை சந்தித்தாலும் கூட, இடைநிற்காமல் மிதமான வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது.. தற்போது இவர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.
கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இதுநாள்வரை பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த இந்தப்படத்திற்கு இப்போது ‘இவன் தந்திரன்’ என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.. நேற்று மாலை இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
Comments are closed.