சமூக பிரச்சனைகளை விட கிசுகிசு முக்கியமா..? ‘பத்த வைடா பரட்டை’ தரும் பதில்..!

311

murali-ram-1

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் தங்களது ஏரியா கவுன்சிலர் யார் என்பது கூட தெரியாது.. ஆனால் அந்த நடிகர் இந்த நடிகையுடன் சுற்றுகிறார்.. இந்த நடிகை அந்தப்படத்தில் இருந்து விலகியது ஏன் என 500 கி.மீக்கு அந்தப்பக்கம் நடக்கும் விஷயங்களில் மட்டும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் உண்மை.. நம்மை சுற்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை விட கிசுகிசுக்களை அதிகம் விரும்பும் மனப்பான்மை எப்படி வந்தது..?

இதற்கு பதில் சொல்லும் விதமாகத்தான் ‘பத்த வைடா பரட்டை’ என்கிற படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பிரபு ஜெயராம்.. குறும்படமாக எடுக்கப்பட்டு இப்போது திரைப்படமாக உருவாக்க இருக்கும் இந்தப்படத்தில் ‘முயல்’, ‘தொப்பி’ படங்களின் நாயகன் முரளி நடிக்கிறார். சினிமா கிசுகிசுக்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் தங்கள் பணம் எவ்வாறு அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதில் ஆர்வம் காட்டினால் என்ன ஆகும் என ஒரு புதிய விஷயத்தை பத்த வைக்க வருகிறது இந்தப்படம்.

Comments are closed.