இயக்குனர் யுரேகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதா..?

229

 

நேற்று வெளியான ‘தொப்பி’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி, தங்கள் இனத்தின் மீது குத்தப்பட்டுள்ள கள்வர்கள்’ என்கிற முத்திரையை மாற்றவேண்டும் என்பதற்காகவே, போலீஸ் ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறி கொண்ட இளைஞனின் போராட்டத்தை மிக நேர்த்தியாக ச்பதிவு செய்திருந்தார் இயக்குனர் யுரேகா.

இந்தப்படத்திற்கான பத்திரிகியாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இந்த காட்சியின்போது இடைவேளையில் தியேட்டருக்கு வந்த யுரேகா, இந்தப்படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், தனது கவனத்திற்கு வராமலேயே தான் எடுத்த பல காட்சிகளை வெட்டி தூக்கிவிட்டு படத்தை சீரழித்து விட்டார்கள் என்றும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஆற்றாமையுடன் கூறினார். இது உண்மை தானா என்பது தயாரிப்பாளர் தரப்பு கொடுக்கப்போகும் விளக்கத்தில் தான் இருக்கிறது.

Comments are closed.