சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவர்தனின் உதவியாளர் இயக்கும் ‘அதே கண்கள்’..!

223

C V Kumar Production Next Project "Athe Kankal"

தயாரிப்பாளர் சி.வி.குமாரை ஒரு குட்டி ஆர்.பி.சௌத்ரி என தாராளமாக கூறலாம். அந்த அளவுக்கு பல அறிமுக இயக்குனர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்த இவரது திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட், தற்போது மேலும் ஒரு புதுமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ‘அதே கண்கள்’ எனும் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பாலசரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகிறார். ஒரு சமையற்கலைஞன், ஒரு பெண் பத்திரிகை நிருபர், துணிக்கடையில் சேல்ஸ்வுமனாக பணிபுரியும் பெண் இவர்களுக்கிடையேயான முக்கோண காதலும் மூன்று பேரும் தங்கள் திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. என்பதும் தான் இந்தப்படத்தின் கதை. ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

Comments are closed.