பாலிவுட் இயக்குனரால் கவனத்துக்கு ஆளான ‘கர்மா’..!

212

karma
பாலிவுடின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல.. மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப்.. இவர் கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார். அந்தவகையில் தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘கர்மா’

‘கர்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். இந்த திரைப்படம் சமீபத்தில் நடந்த மாட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘கவிப்பேரரசு’ வைரமுத்து இப்படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியுள்ளார். திரு. L.V. கணேசன் இசையமைத்து உள்ளார்.

Comments are closed.