
மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலி, நேரம் என்கிற தனது முதல் படத்தில் அறிமுக நாயகனாக தமிழில் தலைகாட்டியதோடு சரி.. மலையாளத்தில் இப்போது டாப் ஹீரோவாக வளர்ந்து அந்த கெத்துடன் தமிழில் நுழைந்திருக்கிறார்.. இவர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன்..
இந்தப்படத்தில் மிக முக்கியமான பாதிரியார் கேரக்டர் ஒன்று இருக்கிறது.. இதில் யாரை நடிக்கவைக்கலாம் என அலசியதில் பிரகாஷ்ராஜ் தான் சரியான் அன்பராக தெரிந்தாராம். இயக்குனரும் நாயகன் நிவின்பாலியும் சேர்ந்தே பிரகாஷ்ராஜை சந்தித்து இந்தப்படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்களாம்.
முதலில் தயங்கியவர், பாதிரியார் கேரக்டர் என்றதும், தான் இதுவரை நடிக்காத கேரக்டராச்சே என ஆர்வமானாராம்.. அப்போதே டயலாக் பேப்பரை வாங்கி படித்தவர், சபாஷ்.. இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என உடனே ஒப்புக்கொண்டாராம்.. இப்போது பிரகாஷ்ராஜ் நடித்த முக்கால்வாசி காட்சிகளை படமாக்கி விட்டாராம் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்..
Comments are closed.