கார்த்தி, விஷாலுடன் தீபாவளி கோதாவில் குதித்த தனுஷ்..!

216

Karthi, vishal And Dhanush Ready to fight in Diwali Race
இந்த வருட தீபாவளி பண்டிகை ரிலீஸ் போட்டியில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் இல்லை. ஆனால் அதேசயம் அடுத்த தளத்தில் இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் ஆக்ரோஷமாக மோதும் என்றே தெரிகிறது.. இதில் கார்த்தியின் ‘காஷ்மோரா’ மற்றும் விஷாலின் ‘கத்திச்சண்டை’ ஆகியவை ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

இப்போது தனுஷும் தனது படத்தை தீபாவளி ரேஸில் இறக்கி விடுகிறார்.. ஆனால் தொடரி’ படத்தை அல்ல.. ‘கொடி’ படத்தை… பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துள்ள ‘தொடரி’ செப்டம்பர் மாதமே வெளியாகி விடும் என தெரிகிறது..

காஷ்மோரா ஹாரர் படம் என்பதாலும், கார்த்தி மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருப்பதாலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விஷால் நடித்துள்ள ‘கத்திச்சண்டை’ படத்தை சுராஜ் இயக்குவதும் வடிவேலு மீண்டும் காமெடியனாக ரீ என்ட்ரி ஆகியிருப்பதும் இந்தப்படத்தின் ப்ளஸ். அதேபோல் ‘கொடி’ படத்தில் தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளது நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தரும் என்பதும் உறுதி.

Comments are closed.