கிடாரியில் தலைதூக்கிய சசிகுமாரின் டைரக்சன் ஆசை..!

258

Kidari Hero Sasikumar Turned to Direction

சுப்ரமணியபுரம்’ படம் மூலம் சசிகுமாருக்கு இரண்டுவிதமான பாதைகள் கிடைத்தன. ஒன்று நடிப்பு.. இன்னொன்று டைரக்சன். ஆனால் அவரை டைரக்சன் பக்கம் பார்வையை திருப்ப விடாமல் நடிகராக மாற்றியது திரையுலகம். அதற்கேற்ற மாதிரி சில ஹிட்டுகளும் கொடுத்தார் சசிகுமார்.

ஆனால் தனது இரண்டாவது படைப்பான ஈசன் சரியாக போகாத நிலையில் டைரக்சன் ஆசையை மூட்டை கட்டிவைத்து விட்டார் சசிகுமார். தற்போது அவர் ஹீரோவாக நடித்து முடித்துள்ள ‘கிடாரி’ படத்தின் கதையை படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் சொன்னபோது பேசாமல் இந்த கதையை தானே இயக்கிவிடலாமா என்கிற ஆசை கூட சசிகுமாருக்கு எழுந்ததாம். ஆனால் ஒரு ஹீரோவாக இந்தப்படத்தில் நடிப்பதையும் மிஸ் பண்ண விரும்பாததால், டைரக்சன் ஆசைக்கு மீண்டும் குட்பை சொல்லிவிட்டு, நடிப்பை தொடர ஆரம்பித்துவிட்டேன் என்கிறார் சசிகுமார்.

Comments are closed.