‘சொப்பனசுந்தரி’ யார் ; ஜெயம் ரவி வெளியிட்ட ரகசியம்..!

210

veera sivaji song

‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காமெடி காட்சிகளில் சொப்பன சுந்தரியும் ஒன்று.. ஆனால் இன்றுவரை அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது.. இதை மையப்படுத்தி வீரசிவாஜி படத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது.

விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘.வீரசிவாஜி’ படத்தில் இமான் இசையில் ‘சொப்பன சுந்தரி’ என்ற சிங்கிள் டிராக் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். நடிகர் ஜெயம் ரவி நேற்று இரவு இந்தப்பாடலை வெளியிட்டார். அந்த பாடலில் சொப்பன சுந்தரி யார் என்பதற்கான விடை கிடைக்கும் என்கிறார்கள்.. முடிந்தால் கேட்டுத்தான் பாருங்களேன்..

Comments are closed.