
‘’நான் ஈ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிக அருமையான வில்லனாக அறிமுகமானவர் சுதீப்.. தொடர்ந்து புலி, பாகுபலி ஆகிய படங்களில் நடித்து தமிழ்நாட்டில் தனக்கான அடையாளத்தையும் ரசிகர்களையும் உருவாக்கி கொண்டார்.. இதை கவனித்த கே.எஸ்.ரவிகுமார் இவரை ஏன் தமிழுக்கு ஹீரோவாக கொண்டுவர கூடாது என எடுத்த அதிரடி முடிவு தான் தற்போது ‘முடிஞ்சா இவன புடி’ என்கிற படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்ய மேனன் நடிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார்.
நேற்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. இதில் அதிசயமும் ஆச்சரியமும் என்னவென்றால் தற்போது தமிழ்சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் இளம் மும்மூர்த்திகளான தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் மூவருமே இந்த விழாவில் கலந்துகொண்டு சுதீப்பை தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Comments are closed.