இளம் நடிகர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்ட கே.எஸ்.ரவிகுமார்..!

254

mudincha ivanai pidi audio
1990ல் ‘புரியாத புதிர்’ படம் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமார் 26 வருட காலம் இந்த திரையுலகில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வீற்றிருக்கும் சாதனையை இனிவரும் இயக்குனர்கள் யாரும் நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகம் தான்.. தற்போது சுதீப்பை வைத்து தான் இயக்கியுள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் மூவரையும் வரவழைத்து ஆச்சர்யப்படுத்தினார் கே.எஸ்.ரவிகுமார்.

இந்த மூன்று நடிகர்களுடன் படங்களில் நடித்த நட்பால் இவர்களை அழைத்தது ஒரு காரணம் என்றாலும், மற்றொரு விஷயமும் அதில் இருக்கிறது.. தான் வெறும் பார்ட் டைம் நடிகரே தவிர, இன்னும் இயக்குனர் என்கிற நாற்காலியை விட்டு கீழே இறங்கவில்லை என்பதை இந்த மூவருக்கும் உணர்த்துவதற்காகவே அவர்களை இங்கே வரவழைத்ததாக கே.எஸ்.ரவிக்குமாரே கூறினார்.

இந்த விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் பி.வாசு கூட இந்த மூவரையும் பார்த்து, எங்களது வயதுதான் அதிகமாகியுள்ளது.. ஆனால் கற்பனைத்திறன் இன்னும் இளமையாகவே உள்ளது என கூறினார். ஆக வயதான இயக்குனர்கள் என தங்களை ஒதுக்கவேண்டாம் என்பதை இன்றைய இளம் நடிகர்களுக்கு சூசகமாக உணர்த்தியுள்ளார்கள் இந்த இரண்டு இயக்குனர்களும்.

Comments are closed.