‘கபாலி’க்கு பாதுகாப்பு ; ஆன்லைன் அட்ராசிட்டிக்கு ஆப்பு..!

193

Kabali secure

என் படத்துக்கு ஒரு பக்கம் சிடி தயாராக இருக்கிறது.. இன்னொரு பக்கம் ரேப்பர் அடித்து ரெடியாக வைத்திருக்கிறார்கள்.. படம் ரிலீஸானால் அன்றைக்கு வெளியிட்டும் விடுவார்கள்” என நடிகர் விஷால் தான் தனது ஒவ்வொரு பட ரிலீஸுக்கு முன்பும் வருத்தமாக இப்படி சொல்லுவார்.. காரணம் திருட்டு விசிடியும் கூடவே அதற்கு வழிகாட்டும் திருட்டு இணையதளங்களும் தான்..

ஆனால் இது எதுவுமே தனது ‘கபாலி’யை பாதித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கலைப்புலி தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில், படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக படங்களை அப்லோடு பண்ணும் இணையதளங்களை முடக்கும்படி மனு செய்தார்.

அதன்படி நீதிமன்றமும் சந்தேகப்படும் வகையிலான இணையதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது. இதையும் மீறி திருட்டுத்தனமாக விசிடிக்கள் வெளியானால் அந்த புல்லுருவிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களையெடுக்கவும் தயாராக இருக்கிறாராம் தாணு.

Comments are closed.