செல்வராகவன் படம் செட்டாகுமா சந்தானத்துக்கு..?

158

selvaraghavan - santhanam

‘தில்லுக்கு துட்டு’ படத்தில் சந்தானத்தை கவனித்த பலரும் ‘அட.. சந்தானம் சூப்பரா ஸ்டெப் போடுறாரே.. பைட் பண்ணுறாரே.. உடம்பை செம பிட்டா மாத்திட்டாரே’ என சொல்ல தவறவில்லை.. ஆக ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தேவையான முயற்சிகளில் சந்தானம் தீவிரமாகிவிட்டார் என்பது புரிகிறது..

ஆனால் திடீரென சந்தானம் செல்வராகவன் டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதை பார்க்கும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சந்தானத்தின் ஏரியா டோட்டல் காமெடி… செல்வராகவனோ அதற்கு நேர் எதிரான படங்களை இயக்குபவர். சீரியஸ் டைப்.. இந்த இரண்டு துருவங்களும் சேர்ந்தால் அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்கிற சந்தேகம் பலர் மனதிலும் ஓடும்..

எது எப்படியோ சந்தானம் தன்னை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த துவங்கிவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. அந்தவகையில் பாலா டைரக்சனில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் சந்தானம் தயாராகத்தான் இருப்பார் போலும்.

Comments are closed.