
ரஜினி படங்களின் கதைக்களங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றியதாகவே இதுவரை இருந்து வந்தது.. ஆனால் முதன்முறையாக மலேசியாவில் தமிழர்கள் எதிர்கொண்டு வரும், அனுபவித்து வரும் பிரச்சனைகளை மையப்படுத்திய கதையில் ரஜினி நடித்துள்ள படம் தான் ‘கபாலி’.. ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது இருக்கட்டும்.. இந்த பிரச்சனையை கதைக்களமாக வைத்து படம் இயக்கும் ஐடியா ரஞ்சித்துக்கு எப்படி வந்ததாம்..?
வெங்கட்பிரபுவிடம் ‘கோவா’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் அல்லவா..? அப்போதுதானாம்.. “கோவா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் தான் படமாக்கப்பட்டது. அங்கு 35 நாட்கள் இருக்கும் போது தான் தமிழ் மக்கள், அவர்களுடைய பிரச்சினை எல்லாம் தெரிந்தது. அதை வைத்து ஒரு பெரிய கதை கிடைத்தது” என்கிறார் ரஞ்சித்.
Comments are closed.