
‘தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். தற்போது திரைவண்ணன் இயக்கத்தில் சிவா, பவர்ஸ்டார், நைனா சர்வார் இணைந்து நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.
இது காமெடிப்படம் தான் என்றாலும் இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாகவே வந்திருக்கின்றனவாம். அதற்கேற்றமாதிரி அதிரடியான குத்துப்பாட்டு, கலாட்டா என இறங்காமல், மெலடிக்கும் கொஞ்சம் மென்மையான ‘போக்’கிற்கும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார்களாம்.
“இந்தப்படத்துல பவர்ஸ்டார் திரையில வந்தாலே நீங்க சிரிப்பீங்கன்னு உறுதியா சொல்வேன்.. அதிலும் குறிப்பா பர்ஸ்ட் ஹாப்ல பவர்ஸ்டார் நிறைய பஞ்ச் பேசிருக்கார்.. செகண்ட் ஹாப்ல கொஞ்சம் சீரியஸா வேறமாதிரி மாறுவார். அதற்கேற்றமாதிரி அவருக்கான பின்னணி இசையையும் மாறும்” என்கிறார் ரகுநந்தன்.
Comments are closed.