ஊரை சுத்தமாக்கினால் கபாலி பட டிக்கெட் இலவசம்..!

185

kabali-1
கபாலி படத்தை பலவிதமாக விளம்பரப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில், ‘கபாலி’ படத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அந்தவகையில் “புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவையை முறையாக பயன்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நகரை சுத்தபடுத்தும் பணியயை யார் செய்தாலும் அவர்களுக்கு ‘கபாலி‘ படத்தின் டிக்கெட்டுகளை புதுச்சேரி கலெக்டர் வழங்கி வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், ரஜினியை ‘செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வருமாறு அவரை நான் வலியுறுத்தப் போகிறேன் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். “சுத்தமான, செழிப்பான புதுச்சேரி திட்டத்துக்கு ரஜினி விளம்பர தூதராக வந்தால் பழைய பழக்கவழக்கங்கள் மாறும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.