மருத்துவமனையில் படுத்துக்கொண்டே புதுமுக இயக்குனர் உருவாக்கிய ‘பட்டதாரி’..!

266

Pattathari Audio Launch

இயக்குனர் மு.களஞ்சியத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஏ.ஆர்.சங்கர் பாண்டி என்பவர் ‘பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.. இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனர் மு.களஞ்சியம் ஒரு கார் விபத்தில் சிக்கியபோது, இவரும் அந்த விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு, கடுமையான சிகிச்சைக்குப் பின் உயிர்மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் ஆறுமாதம் மருத்துவமனையில் இருந்தபோதுதான் இந்தப்படத்தின் கதையை உருவாக்கினாராம் இயக்குனர் சங்கர் பாண்டி. எஸ்.எஸ்.குமரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் மு.களஞ்சியம், சசி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படம் மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது.. ஆனால் வழக்கமாக மதுரை என்றாலே நமக்கு காட்டப்பட்டும் அருவா, வேல் கம்பு சினிமா இல்லை இது.. கல்லூரியை முடித்துவிட்டு மேற்படிப்பும் படிக்காமல் அதேசமயம் வேலைக்கும் போகாமல் ஊரைச்சுற்றும் ஐந்து இளைஞர்களை பற்றிய கதைதான் இந்த ‘பட்டதாரி’.

Comments are closed.