
பொதுவாக சுந்தர்.சி படங்களில் மட்டுமே பல நடிகர்கள் பங்குபெறும் பாடல் காட்சி படம் தவறாமல் இடம்பெறுவது வழக்கம்.. அதுகூட ஒரு பத்து பிரபலங்கள் தான் இருப்பார்கள்.. ஆனால் ‘முப்பரிமாணம்’ என்கிற படத்தில் திரையுலக பிரபலங்கள் 27 பேரை ஒரே பாடலுக்கு ஆடவைத்து சாதனை படைத்துள்ளார்கள்.
சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை அதிரூபன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் கதிரிடம் காதல் வைரஸ் படத்திலும், இயக்குனர் பாலாவிடம் நான் கடவுள் படத்திலும் பணியாற்றியவர். கபிலன் எழுதிய இந்தப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, வெங்கட் பிரபு, விஜய் ஆண்டனி, பிரசன்னா, பாபி சிம்ஹா, கலையரசன், சூரி, விதார்த், ஆரி, பிரேம்ஜி அமரன், அசோக் செல்வன். சங்கீதா கிரிஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், ஜனனி ஐயர், பிரித்வி, கிரிஷ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் கீர்த்தி சாந்தனு ஆகிய 27 பேர்தான் இந்தப்பாடலில் ஆடியவர்கள்.
ஆனால் படத்தின் கதாநாயகியான சிருஷ்டி டாங்கே மட்டும் இந்தப்பாடலில் ஆடவில்லை என்பது ஆச்சர்யம் தான்.
Comments are closed.