
வெகு பிரமாண்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டு விழா, ரஜினி இன்னும் அமெரிக்காவில் இருந்து திரும்பாத காரணத்தால் எளிமையாக வெளியிடப்பட இருக்கிறது. நாளை காலை 11 மணி அளவில் யூடியூப்பில் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் 35 செகண்ட் ஓடக்கூடிய டீசர் ஆகியவை வெளியிடப்படுகின்றன..
ஆக கபாலி ஆடியோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பொதுவாக ரஜினி படம் என்றால், அதில் பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ஆனால் சில தினகளுக்கு முன் வெளியான ‘கபாலி’ படத்தின் ட்ராக் ட்லிஸ்ட்டில் அந்த மரபுகள் உடைத்தெறியப்பட்டுள்ளன என்றே கூறலாம்.
வைரமுத்து, எஸ் பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் நெருப்புடா… என்கிற பாடலின் நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினியே எழுதியிருக்கிறார் என்பதுதான்..
Comments are closed.