பிரமிக்க வைக்கும் விஷயங்களும் பிரபு சாலமனின் கதைக்களங்களும்..!

236

prabhu solomon's films

தமிழ் சினிமாவின் முதல் பத்து இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை இயக்குனர் பிரபு சாலமனுக்கு கொடுத்துத்தான் ஆகவேண்டும். காதல் கதை தான் எடுக்கிறார். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் எடுக்கிறார்.. ஆனால் தொடர்ந்து தனது படங்களில் அவர் பயன்படுத்தி வரும் கதைக்களங்களை கவனித்திருக்கிறீர்களா..?

அதற்கு முன் ஒரு கேள்விக்கு வருவோம்..? இன்றைய உலகில் எப்போதுமே பிரமிப்பை தரும் படைப்புகள் என வெகு சிலவே இருக்கின்றன. அது இயற்கையாக உருவானதோ அல்லது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதோ எதுவாகவோ இருந்தவிட்டு போகட்டும்.. அப்படிப்பட்டவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியந்து பார்க்கும் நான்கு படைப்புகள் தான்

1.காடு 2.கடல் 3.யானை 4.ரயில்

இப்போது என்ன சொல்லவருகிறோம் என்பது ஓரளவு யூகிக்க முடிகிறது தானே…? ஆம் பிரபுசாலமனின் படங்கள் காதலை மையப்படுத்தினாலும் மேற்கூறிய படைப்புகள் தான் அவரது கதையில் பிரதான இடத்தை பிடிக்கின்றன.. முக்கிய திருப்பங்களுக்கும் காரணியாக அமைகின்றன. இவை அனைத்துமே பார்க்க பார்க்க திகட்டாதவை.. முக்கியமாக குழந்தைகளை கவர்ந்தவை.. அதேசமயம் மனிதர்களிடம் ஒருவித பிரமிப்பையும் பயத்தையும் ஏற்படுத்த வல்லவை.

அந்தவகையில்

‘மைனா’வில் காடு,
‘கும்கி’யில் யானை
‘கயல்’ படத்தில் கடல்
இப்போது ‘தொடரி’யில் ரயில்..

இவையெல்லாம் அவரது படங்களில் ஏதேச்சையாக அமைந்திருக்கலாம். அல்லது இந்த படைப்புகளின் பின்னணியில் தான் கதைகளை உருவாக்கவேண்டும் என்று கூட பிரபு சாலமன் தீர்மானித்திருக்கலாம். நம் ஊகம் சரிதானா என்பதை அவரது அடுத்த படம் வந்து தான் உறுதிப்படுத்த முடியும்.

Comments are closed.