‘அட்ரா மச்சான் விசிலு’ ; பவர்ஸ்டாரின் புதுமையான ‘பாடி லாங்குவேஜ்’…!

271

power star 1
ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.. ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்தப்படத்தில் பவர்ஸ்டாரின் நடிப்பை பற்றி குறிப்பிட்டு பேசிய சிவா, “ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும்.. ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு. யாரவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க… சான்சே இல்லை.. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு” என மேடையிலேயே கலாய்த்தார் சிவா..

Comments are closed.