
தனது இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தையும் இதனால் ஏற்படும் விளைவுகளையும் வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘கொளஞ்சி’.. சிம்புதேவன் மற்றும் ‘மூடர்கூடம்’ நவீன் ஆகியோரிடம் பணியாற்றிய தனராம் சரவணன் என்பவர் இந்த “கொளஞ்சி” படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் இளம் வயது ஜோடியாக ராஜாஜி, நைனா சர்வார் இருவரும் நடிக்கின்றனர். மூடர்கூடம்’ நவீன், தனது சிஷ்யருக்காக இந்தப்படத்தை தானே தயாரித்திருக்கிறார். தற்போது “கொளஞ்சி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.