
அவ்வப்போது யாராவது ஒரு பிரபலத்தைப்பற்றி ஏதாவது குதர்க்கமான கருத்துக்களை சர்ச்சைகளின் நாயகனாக வளம் வருபவர் தான் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் தற்போது இந்தியில் இயக்கி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் சந்திப்பில் கலந்து கொண்ட ராம்கோபால் வர்மா, இப்படி சர்ச்சையான கருத்துக்களை அடிக்கடி கூறுவது தனது பப்ளிசிட்டிக்காகத்தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
“நான் ஒரு சினிமா படைப்பாளி, கண்டிப்பாக என் மீது அனைவரின் பார்வையும் விழவேண்டும் என்ற நோக்கம் இருக்கத்தான் செய்யும். அதே சமயம் சமூக வலைதளங்கள் நம் கருத்துகளை, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள, அதில் சில நேரங்களில் மக்களும் பங்கேற்கும்போது அது பெரிதாக்கப்படுகிறது” என தனது செயலுக்கு சப்பைக்கட்டும் கட்டியுள்ளார்.
Comments are closed.