
இதுநாள் வரை சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனை பற்றி பலவிதமான படங்கள் வந்துவிட்டன. அவன் உயிரோடு இருக்கும்போதே எடுக்கப்பட்டு ஹிட்டான ‘கேப்டன் பிரபாகரன்’ முதல் கடந்த வருடம் வெளியான ‘வணயுத்தம்’ வரை பல இயக்குனர்கள் சில உண்மைகளையும் பல யூகங்களையும் ஒன்று சேர்த்து வீரப்பன் பற்றிய படங்களை இயக்கினார்கள். அதில் கேப்டன் பிரபாகரன் தவிர, மற்ற படங்கள் பெரிய வீரியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில், கன்னடத்தில் கில்லிங் வீரப்பனாக வெளியான படமே தற்போது இந்தியில் வீரப்பனாகவும், தமிழில் வில்லாதி வில்லன் வீரப்பனாகவும் வெளியாக இருக்கிறது. இந்தியில் மே 27ம் தேதியும், தமிழில் ஜூன் 3ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதில் வீரப்பனை பற்றிய அப்படி என்ன புது தகவலை சொல்லப்போகிறாராம் வர்மா..?
“உண்மையைச் சொன்னால் வீரப்பனின் கதை இதுதான் என யாரும் சரியான ஆவணங்களை உருவாக்கவில்லை, எல்லாமே செவிவழி கதைகளாகவும், அவரவருக்குக் கிடைத்த தகவல்களாகவும் தான் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு படமும் உருவாகின்றன. அப்படித்தான் எனக்குக் கிடைத்த தகவல்களின்படி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். வீரப்பனின் கடைசி இரண்டு வருட வாழ்க்கை தான் இந்தப் படத்தின் கதை, எப்படி போலீஸார் திட்டமிட்டு வீரப்பனைப் பிடித்தனர், அதில் நடந்த ஆபரேஷன் மட்டுமே திரைக்கதை” என்கிறார் ராம்கோபால் வர்மா.
Comments are closed.