
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற வித்தியாசமான டைட்டிலுடன் உருவாகிவரும் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சூரி காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இது அரசியல் பின்புலத்தை கொண்ட கதையா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.. ஆனால் அரசியல் களத்தில் காமெடியாக பின்னப்பட்ட கதை இது என விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் எழில். தான் விசுவாசமாக இருக்கும் எம்.எல்.ஏவிடம், தனது காதலியின் போலீஸ் வேலைக்காக பணம் கொடுக்கிறார் விஷ்ணு.. அதை மந்திரியிடமும் டிஜிபியிடமும் சேர்த்து வேலை வாங்கி தருவதாக சொல்லி கிளம்புகிறார் எம்.எல்.ஏ.. வேலை கிடைத்ததா..? இல்லையா..? விஷ்ணுவின் காதல் என்ன ஆனது என்பதுதான் நகைச்சுவை கலந்த மீதிக்கதையாம்.
Comments are closed.