லட்சுமி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு…!

199

ammani
ஆரோகணம் படத்தை இயக்கியதன் மூலம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இயக்குனராக வரவேற்பு கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் தனது இரண்டாவது படமான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் அந்த வரவேற்பை தக்கவைக்க தவறிவிட்டார்.. விளைவு..? இதோ அவர் மூன்றாவதாக இயக்கி, நடித்தும் உள்ள ‘அம்மணி’ படம் எடுத்து முடிக்கப்பட்டு பல நாட்களாகியும் இன்றுவரை வாங்கவோ அல்லது வாங்கி வெளியிடவோ யாரும் முன் வரவில்லை.

இவ்வளவு நாள் பொறுத்து பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், இப்போது அந்தப்படத்தை தானே வெளியிடும் முயற்சியில் இறங்கி விட்டாராம்.. இதன்மூலம் படத்தை வெளியிடும் விநியோக துறை பற்றி அறிந்துகொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என பாசிட்டிவாக நினைக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Comments are closed.