
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தொடரி’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்துடன் சேர்த்து அடுத்ததாக தான் நடித்துவந்த ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பையும் கூட தனுஷ் முடித்துவிட்டார் என்றாலும் முதலில் திரைக்கு வருவது ‘தொடரி’ தானாம்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று காலை ‘தொடரி’ படத்தில் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேச ஆரம்பித்த தனுஷ், ஒரேநாளில் டப்பிங்கை பேசி முடித்து அசத்தியுள்ளார்.. கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன் ஒருகட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கிடைத்த இடைவெளியில் டப்பிங் பேச வந்துவிட்டாராம்.
Comments are closed.