விநாயகர் சதுர்த்தி(க்கென) ஸ்பெஷல் ரிலீஸாக தயாராகும் ‘இருமுகன்’..!

225

Iru-Mugan

‘அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் ஷங்கர் டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இந்தப்படத்தில் கதாநாயகியாக விக்ரமுக்கு ஜோடியாக முதன்முறையாக நடித்து வருகிறார் நயன்தாரா. இன்னொரு நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

விக்ரமின் நண்பனாக ‘இருமுகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கருணாகரன். சயன்ஸ் பிக்சன் படமாக இது உருவாக்கி வருகிறது. இந்தப்படத்தை இந்த வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக ரிலீஸ் செய்ய உத்தேசித்துள்ளார்களாம். விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படம் கடந்த அக்டோபரில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.