
இன்று அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டாலும் அவ்வப்போது கார் ரேஸ், பைக்ரேஸ் ஆகியவை திருட்டுத்தனமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன… இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘ஜெயிக்கப் போவது யாரு’ என்கிற படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறார்களாம்..
ஐந்து குருப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் ஷக்திஸ்காட். நாயகனாக நடிப்பவரும் இந்த ஷக்திஸ்காட் தான். இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் முதன்முறையாக காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கூடவே முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார்.
Comments are closed.