செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படம் வெளியாகாததற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா..?

218

Kalaipuli-S-Thanu

கடந்த ஏப்-14 அன்று விஜய் நடித்த ‘தெறி’ படம் கோலாகலமாக வெளியானது.. இன்றுவரை நல்ல வரவேற்பும் வசூலுமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. ஆனால் இதற்கு திருஷ்டி பொட்டு வைக்கும் விதமாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு விநியோக ஏரியாவுக்கு உட்பட்ட சுமார் 60 தியேட்டர்களில் இன்றுவரை ‘தெறி’ படம் ரிலீசாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

‘தெறி’ படத்துக்கான செங்கல்பட்டு ஏரியா உரிமை அதிக விலை சொல்லப்பட்டதால் விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள் என்று இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.. ஆனால் இது குறித்து முதலில் விளக்கம் கூறிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விநியோகஸ்தர்களோ அல்லது தியேட்டர் அதிபர்களோ அல்லாத ஒருசிலர் பணத்தை குறிவைத்து இந்த காரியத்தை செய்துள்ளனர்” என்றார்..

ஆனால் இன்றுவரை இந்த பிரச்சனை தீராமல் இருப்பதால் இதன் பின்னணியில் இருப்பவர் செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்களை ஆட்டிவைக்கும் பன்னீர் செல்வம் தான் என உண்மையை இன்று உடைத்து கூறியுள்ளார். பன்னீர் செல்வம் தனது வீட்டு திருமண விழாவுக்கு ரஜினி, விஜய்யை அழைத்ததாகவும், அவர்கள் வர மறுத்துவிடவே அந்த காரணத்தால் ‘தெறி’ படத்தை முடக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் தாணு. மேலும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கும் இதேபோன்ற சிக்கலை அவர் உருவாக்க இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார் தாணு

Comments are closed.