
தலைநகரம், மருதமலை இயக்குனர் சுராஜ் இயக்கிய சகலகலா வல்லவன் படம் சில மதங்களுக்கு முன் வெளியானது. இந்தப்படத்தி அடுத்து விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் சுராஜ்.. படத்திற்கு கத்திச்சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுராஜின் படங்களில் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேல் இந்தப்படத்தில் காமெடியனாக நடிக்கிறார்.
‘திமிரு’ படத்துக்குப்பின் விஷால், வடிவேல் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தலில் விஷாலின் ஒவ்வொரு கட்ட பிரச்சாரத்திலும் வடிவேலு அவருக்கு உறுதுணையாக இருந்தார் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோமே. தனால் படத்திலும் அவர்கள் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆகும் என்கிறார் சுராஜ்.
Comments are closed.