‘ஜித்தன்’ ரமேஷ் என அந்தப்படத்தின் ஹீரோ ரமேஷுக்கு பெயர் வாங்கித்தரும் அளவுக்கு மிக அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது தான் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான ‘ஜித்தன்’ படம்.. வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் மாயமனிதனாக நடித்திருந்தார் ரமேஷ். சிலகாலங்களாக ஜித்தன் ரமேஷின் படங்கள் வெளிவராமல் இருந்த நிலையில் இப்போது ‘ஜித்தன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜித்தன்-2’ வரும் ஏப்-8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார்.. ஆனால் இந்தப்படத்தை அவரது உதவியாளர், புதுமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்கினாலும், வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுதியுள்ளார். முதல் பாகத்தில் இறந்துப்போன ரமேஷ் இரண்டாம் பாகத்தில் மீண்டும் பிறக்கிறார். அதன்பின்னர் ஒரு பேயுடன் மாட்டிக்கொண்டு வாழும் தருணங்களே ஜித்தன் 2’ படத்தின் கதையாம்.. ஜித்தன் ரமேஷுக்கு இந்தபடம் கைகொடுக்கும் என நம்பலாம்.

Comments are closed.