விரைவில் வெளிவரவிருக்கும் டிஸ்னியின் புதிய படமான தி ஜங்கிள் புக் – மௌக்லி’ என்கிற அனிமேஷன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ‘மெளக்லி’யாக ‘நீல் சேத்தி’ நடித்திருக்கிறார். அவ்வளவு எளிதில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிடவில்லை. சுமார் 2000 பேருக்குமேல் கலந்து கொண்ட நேர்காணலில் டைரக்டர் ஸ்டீவ் ஃபேவ்வரூவால் மெளக்லி என்ற கதாபாத்திரத்திற்காக ‘நீல் சேத்தி’ தேர்தெடுக்கப்பட்டார்.
12 வயதான ‘நீல் சேத்தி’, மும்பையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வருகிறார். படத்தின் புரோமோஷனுக்காக இந்தியா வந்த ‘நீல்சேத்தி’, படம் குறித்த புரமொஷனில் அவர் பேசும்போது, பட அனுபவங்களை குறிப்பிட்டு சிலாகித்து பேசினார்..
“’மெளக்லி’யாக இந்தியா வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் வசிக்கும் எனது பாட்டி,தாத்தாவின் மூலம் நான் நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக காடு, மற்றும் விலங்குகள் சம்பந்தப்பட்ட கதைகள் கேட்கும்போது எப்போதும் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி தோன்றும். என்னுடைய முதல் படத்திலேயே, நான் கதைகளில் மிகவும் ரசித்த சிறுத்தையுடனும்(பகீரா) கரடியுடனும்(பாலு) இணைந்து நடித்துள்ளேன். அவைகளுடன் இணைந்து நடிக்க முதலில் பயமாகத்தான் இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல நான் அவைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டேன். இந்தியமக்களும் இந்த காட்டிற்குள் வந்து எங்களை ரசித்து விட்டுச் செல்வார்கள் என நம்புகிறேன்”. என்று கூறினார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் இந்தியாவை கதைக் களமாகக் கொண்டிருப்பதால், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, இர்பான், நானா படேகர், ஃஷெப்பாலி ஷா மற்றும் ஒம் பூரி ஆகியோரது குரல்களை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்களாம். சமீபகாலத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் உலகம் முழுதும் ஏப்ரல்-14ல் திரைக்கு வருகிறது. கதைக்களம் இந்தியாவாக இருப்பதால் ஒரு வாரம் முன்னதாக, இந்தியாவில் ஏப்ரல்-8ம் தேதியன்று வெளியாகின்றது.

Comments are closed.